அக்-13ல் ‘பாண்டியநாடு’ ஆடியோ ரிலீஸ்

87

விஷால் நடிக்கும் ‘பாண்டியநாடு’ படம் தீபாவளிக்கு வெளியாவது எப்போதோ உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் 13ஆம் தேதி நடத்த உள்ளார் விஷால். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலே தயாரிக்கிறார்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான்’ என்ற சிங்கிள் ட்ராக்கை லயோலா கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் கடந்த செப்-22ஆம் தேதி வெளியிட்டார்கள். விஷால், விக்ராந்த், சூரி மூன்று பேரும் ஆடிப்பாடும் அந்த பாடல் எஃப்.எம் நேயர்களால் அதிகம் விரும்பி கேட்கப்படும் பாடலாக மாறியிருக்கிறது.

அது மட்டுமல்ல. இந்தப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசனையும் ஒரு பாடல் பாடவைத்திருக்கிறார் இமான். தமிழில் பாடவேண்டும் என்ற ஏக்கம் ரம்யா நம்பீசனுக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. இப்போது ‘பாண்டியநாடு’ படத்தில் ரம்யா நம்பீசனை பாடவைத்து தமிழில் பாடகியாக அறிமுகம் செய்து அந்த ஏக்கத்தை போக்கியிருக்கிறார் டி.இமான்.

Leave A Reply

Your email address will not be published.