
இயக்குனர் பி.வாசுவிடம் பல வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மூர்த்தி கண்ணன்.. இவர் தற்போது ‘சாலையோரம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து படக்குழுவினரை கௌரவப்படுத்தினார் தமிழக ஆளுநர் ரோசையா அவர்கள்.
மேலும் இயக்குனர் பி.வாசு, நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். ‘அஞ்சாதே’ படத்தை தொடர்ந்து இந்தப்படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார் பாண்டியராஜன். விழாவில் பேசிய பாண்டியராஜன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்ட அதே இனிய அனுபவம் இன்று கவர்னருடன் ஒரே மேடையில் அவரது பக்கத்தில் அமர்ந்தபோது இரண்டாவது முறையாக கிடைத்தது” என்று தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்.
Comments are closed.