
இனிமே இப்படித்தான் படம் சந்தானம் தனது நண்பர்களுக்காக தானே தயாரிப்பாளராக நடித்துக்கொடுத்த படம் என்றுதான் பெயரே தவிர, படத்தின் இயக்குனர்களான முருகன் மற்றும் ஆனந்த்திடம் பல கதைகளை கேட்டுத்தான் ஒகே பண்ணியிருக்கிறார். ஒரு பஞ்ச் டயலாக் சொன்னார்கள் என்றாலும் அதில் கூட நான்கு ஆப்சன்கள் கேட்டு அதில் ஒன்றைத்தான் செலெக்ட் செய்வாராம்.
இந்த அளவுக்கு பார்த்து பார்த்து பண்ணியிருப்பதால் அவதார் ரேஞ்சுக்கு நினைத்துவிடாதீர்கள் என்று சொல்கிற சந்தானம் வரும் ஜூன்-12 ஆம் தேதி இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறார்.. இன்னொருவர் படத்தில் பர்ஸ்ட் காபி அடிப்படையில் படம் தயாரித்ததை விட, இப்போது தானே சொந்தமாக படம் தயாரித்தபோது தான் பல புதிய அனுபவங்கள் கிடைத்தன என்கிறார் சந்தானம்.
Comments are closed.