சில வருடங்களுக்கு முன் இரண்டுபேர் மட்டுமே நடித்து ‘பை-2’ என்ற படம் வெளியானது. தற்போது இன்னொரு புதிய முயற்சியாக ஒருவர் மட்டுமே நடிக்கும் படம் ஒன்று வெளியாகி சாதனை படைக்க இருக்கிறது. படத்தின் பெயர் ‘என் உயிர் என் கையில்’. இந்தப்படத்தில் அந்த ஒருவராக நடிக்கிறார் ஜெய் ஆகாஷ்.
ஜெய் ஆகாஷை ஒரு மரப்பெட்டியில் வைத்துப் பூட்டி அதை தண்ணீருக்குள் தள்ளிவிடுகிறார்கள் அவரது எதிரிகள். அவரிடம் இருப்பது செல்போனும் ஒரு சிகரெட் லைட்டரும் தான். அதை வைத்து அவர் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் தான் முழுப்படத்தின் கதையாம். ஒரே ஆளை வைத்து இரண்டுமணிநேரம் எப்படி கதை சொல்லமுடியும் என்று ஆச்சர்யப்படுபவர்கள் படம் பார்த்தால் வாயடைத்துப் போய்விடுவார்களாம். இந்தப்படத்தை தமிழ், ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் படமாக எடுத்து வருகிறார்கள்.