உலகம் வெப்பமாகிக் கொண்டிருபதால் அந்தந்த காலங்களில் நிகழ வேண்டியவை தள்ளிப் போய் விடுகிறது. அதனால் உலகத்தை காக்க நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் என்கிற கருத்தும் அதன் அவசியமும் பரவலாக ஏற்பட்டுள்ளது.
இதைப்பற்றிய விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக கணேஷ், குமரேஷ் என்ற இருவரும் சேர்ந்து “சீசன்ஸ்” என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்கள். கணேஷ், குமரேஷ் இருவரும் கே.பாலசந்தர் இயக்கிய ‘ஒரு வீடு இரு வாசல்’ என்ற படத்தில் கதாநாயகர்களாக நடித்தவர்கள்.
அத்துடன் Dance Like a Man என்ற படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்கள். மேலும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரீஸ் ஜெயராஜ், உட்பட அனைத்து இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசை ஆல்பத்தில் கணேஷ், குமரேஷ் ஆகியோருடன் சின்மயியும் பாடியுள்ளார்.