
இரண்டு வருடத்துக்கு ஒரு படம் தந்தாலும் மணியான படம் தருபவர் இயக்குனர் பிரபு சாலமன்.. கடந்த இரண்டு வருடங்களாக சந்திரன், ஆனந்தி என்கிற இரண்டு புதுமுகங்களை வைத்து சுனாமியின் சீற்றத்துடன் தனது ‘கயல்’ படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழா முடிந்ததும் அதே காம்ப்ளக்ஸில் கீழே உள்ள ‘டால்பி அட்மாஸ்’ ஒலியமைப்பு வசதியுள்ள ‘சீசன்ஸ்’ தியேட்டரில் பத்திரிகையாளருக்காக பிரத்யேகமாக மீண்டும் பாடல்களையும் ட்ரெய்லரையும் திரையிட்டு காட்டினார்.
டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில், அந்த சவுண்டு சிஸ்டத்தில் பாடல்களை கேட்பதே புதுவித அனுபவமாக இருந்தது. கடந்த வருடமே ‘கயல்’ படத்தின் க்ளைமாக்ஸை படமாக்கிவிட்ட பிரபு சாலமன், இந்த புதிய ஒலி தொழில் நுட்பத்தில் படத்தை தரவேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கெட்டு வருகிறார்.
குமரி முதல் இமயம் வரை பயணிக்க கூடியதாக அமைந்துள்ள இந்த கதையில் சுனாமியையும் அது புரட்டிப்போடும் ஒரு காதலையும் விவரித்திருக்கிராராம் பிரபு சாலமன். அவரின் ஆஸ்தான இசையமைப்பாளரான டி.இமானின் இசையில் பாடல்களை கேட்டபோது மீண்டும் இவர்கள் கூட்டணியில் ‘மைனா’, ‘கும்கி’ போல ஒரு ஹிட் ஆல்பம் தயார் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.
Comments are closed.