எழுத்தாளர்கள் சுபாவுக்கு அஜீத் போட்ட கண்டிஷன்

97

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்கள்தான் எழுத்தாளர்கள் சுபா. நாவல் உலகில் ஜாம்பவான்களாக வலம் வந்துகொண்டிருந்த இந்த இரட்டையர்களுக்கு திரையுலகில் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் கதாசிரியர்கள் அந்தஸ்து கிடைத்தது. தொடர்ந்து கே.வி.ஆனந்தின் படங்களில் தவறாமல் இடம்பெற்று வரும் இவர்கள் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார்கள்.

இப்போது அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் ஆரம்பம் படத்தின் கதாசிரியர்களும் இவர்கள்தான். விஷ்ணுவர்தனுடன் சேர்ந்து ‘ஆரம்பம்’ படத்தை இன்ச் பை இன்ச்சாக செதுக்கியிருக்கும் இவர்கள் ஆரம்பம் படத்தில் பணிபுரிந்ததின் மூலம் தங்களது திரைப்பயணத்தின் உச்சகட்டத்தை தொட்டுள்ளதாக கூறுகிறார்கள். ‘ஆரம்பம்’ பற்றிய சில அனுபவங்களை அவர்கள் வாயாலேயே கேட்போமே.

“இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது, லட்சக்கணக்கான அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே ஆரம்பம் படத்தின் கதையாக உருவெடுத்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு கதைக்கருவை அஜீத்திடம் பகிர்ந்துகொள்ள முதன்முதலாக அவரை சந்தித்தபோது அவ்ர் சொன்ன ஒரே விஷயம் படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, பஞ்ச் வசனங்களோ இருக்கக்கூடாது என்பதுதான். மேலும் கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்ட பிறகுதான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னம்பிக்கை அவருடன் பணியாற்றும் அனைவருக்கும் ஒட்டிக்கொண்டதில் ஆச்சர்யமில்லை” என்று அஜீத் புராணம் பாடுகிறார்கள் எழுத்தாளர்கள் சுபா.

Leave A Reply

Your email address will not be published.