
ஆரம்பம் படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யட்சன்’. இந்தப்படத்தில் ஆர்யா, கிருஷ்ணா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். விஷ்ணுவர்தன் முதன்முறையாக தனது தம்பியை வைத்து படம் இயக்கியுள்ளதால் கிருஷ்ணாவுக்கு இந்தப்படம் ரொம்பவே ஸ்பெஷல்.. யுடிவி நிறுவனம் இந்தப்படத்தை விஷ்ணுவர்த்தனுடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப்படத்தின் கதாநாயகிகளாக தீபா சன்னிதி, ஸ்வாதி இருவரும் நடித்துள்ளனர். விஷ்ணுவர்தனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கிருஷ்ணா ‘நான் தான் இனி சின்னத்தல’ என கலாட்டா பண்ணினார்.
இதுபற்றி கிருஷ்ணா பேசும்போது, “எங்க அண்ணன் தல அஜீத்தை வைத்து படம் எடுப்பார், அல்லது ஆர்யாவை வைத்து படம் எடுப்பார். இரண்டு இல்லையென்றால் இரண்டு பேரையும் சேர்த்து வைத்து படம் எடுப்பார். இந்த படத்தில் அஜீத் இல்லாததால் அவருடைய இடத்தை ஆர்யா பிடித்துள்ளார். ஆர்யாவின் இடத்தை நான் பிடித்துள்ளேன். அதனால் இந்த படத்தை பொறுத்தவரை ஆர்யா பெரிய தல’… நான் சின்னத்தல’ என்று கலகலப்பாக பேசினார்.
Comments are closed.