சமீபத்தில் நடந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் தயாரிபாளர்கள் சங்க தலைவர் கேயார், குஷ்பூ உட்பட பலரும் கலந்துகொண்டனர். இதில் பேசிய கேயார் “இன்றைக்கு நடிகைகள் பலரும் படத்தின் விழாக்களுக்கு வராமல் தவிர்க்கிறார்கள். ஆனால் சிலர் மட்டும் வந்து கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இதேபோல் எல்லா நடிகைகளும் நடந்துகொள்ள வேண்டும். இதில் இன்றைக்கு உள்ள நடிகைகள் குஷ்பூவை பார்த்து நடந்து கொள்ளவேண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தலைவலி வந்தால் கூட ஷாட் ரெடி என்று குரல் வந்தால் எதையும் பொருட்படுத்தாலும் சுறுசுறுப்பாக வந்து நடித்து கொடுப்பார், தயாரிப்பாளர்கள் மீதும், இயக்குனர்கள் மீது அக்கறை வைத்து நடித்துக் கொடுக்கும் குஷ்பூவிடம் இப்போதுள்ள நடிகைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று பேசினார் கேயார்.