’ஜன்னல் ஓரம்’ வெளியீட்டு விழா நடத்தும் படக்குழு

88

கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன், விமல், பூர்ணா, விதார்த் ஆகியோர் நடிக்கும் படம் ‘ஜன்னல் ஓரம்’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டை வித்தியாசமாக நடத்த திடடமிட்ட படக்குழுவினர் பார்த்திபனிடம் யோசனை கேட்டிருக்கிரார்கள். சும்மாவே சூட்டை கிளப்பிவிடும் பார்த்திபனுக்கு அடுப்பை கொடுத்தால் விடுவாரா…படத்தின் டெக்னிஷியன்கள் அத்தனை பேரையும் ஒரு பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்னை முழுக்க வலம் வந்து அங்கங்கு நிறுத்தி பஸ்ஸின் ஜன்னல் வழியே படத்தின் பாடல் சிடியை வெளியிட ஐடியா கொடுத்தார் பார்த்திபன். இதன்படி நாளை காலை 8 மணிக்கு வடபழனி பஸ் நிறுத்தத்திலிருந்து இசைகச்சேரியுடன் புறப்படும் பேருந்து தாம்பரம் வரை சென்று பாடலை வெளியிடப் போகிறது. மாலை கமலா திரையரங்கில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விழாவும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.