“தெலுங்கில் ராஜாராணி ரீமேக் இல்லை.. டப்பிங் தான்.. ” –ஏ.ஆர்.முருகதாஸ்

174

தமிழில் ஒரு படம் ஹிட்டாகி, ஐம்பது நாட்களையும் வெற்றிகரமாக நெருங்கிவிட்டால் அடுத்து என்ன? தெலுங்கில் ரீமேக் செய்ய வேண்டியதுதான். அப்படித்தான் ஆர்யா, நயன்தாரா நடித்த ‘ராஜாராணி’ படத்தையும் தெலுங்கில் ரீமேக் செய்யப்போகிறார்கள் என ஒரு பேச்சு கிளம்பியது.

ஆனால் படத்தின் தயாரிப்பாளரான ஏ.ஆர்.முருகதாஸ் இந்த செய்தியை மறுத்துள்ளார். தெலுங்கில் கூடிய விரைவில் ‘ராஜாராணி’ படத்தை டப்பிங் செய்யபோவதாகவும் யாருக்கும் ரீமேக் உரிமையை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார். இளவட்டங்களை மட்டுமின்றி ஃபேமிலி ஆடியன்ஸையும் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் தெலுங்கிலும் சூப்பர்ஹிட்டாகும் என தான் நம்புவதாகவும் குறிப்பிடுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

Leave A Reply

Your email address will not be published.