பாலாஜி மோகன் இயக்கத்தில் நஸ்ரியா நடித்துவரும் ‘வாய முடி பேசவும்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மூணரில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில் டூ-வீலர் ஓட்டுவதுபோல படமாக்கினார்கள். ஆனால் வண்டி ஓட்டும்போது நஸ்ரியா நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன்பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் நஸ்ரியா. இரண்டு நாட்களாக பெய்திருந்த மழையில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியிருந்ததுதான் விபத்துக்கு காரணம் என்கிறார்கள் படப்பிடிப்புக்குழுவினர். இந்தப்படம் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் தயாராகி வருகிறது.