உலகெங்கிலும் 1250 பிரிண்ட்டுகள்- பாய்ச்சலுக்கு தயாராகும் ‘இரண்டாம் உலகம்’

72

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா அனுஷ்கா நடிக்கும் படம் இரண்டாம் உலகம். இது தெலுங்கில் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தை தனது கனவுப்படம் என்று சொல்லும் ஃப்ரேம் பை ஃப்ரேமாக செதுக்கியிருக்கிறார் செல்வராகவன். சமீபத்தில் இதன் தெலுங்குப் பதிப்பான ‘வர்ணா’வை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு எந்தவித ‘கட்’டும் கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஆர்யா, அனுஷ்கா இருவரும் தங்களது திரையுலக வாழ்க்கையில் ‘இரண்டாம் உலகம்’ படம் ஒரு மறக்கமுடியாத அனுபவம் என குறிப்பிட்டுள்ளனர். படத்தின் மேலுள்ள நம்பிக்கையில் இதில் ஒருபடி மேலே போய் ‘இரண்டாம் உலகம்’ படத்தை மலேசிய மற்றும் சிங்கப்பூர் தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளார் ஆர்யா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இந்தப்படம் தமிழ்நாட்டில் 350, தெலுங்கில் 400, கேரளாவில் 60, கர்நாடகாவில் 70 வட மாநிலங்களில் 120 மற்றும் வெளிநாடுகளில் 250 தியேட்டர்கள் என உலகெங்கிலும் சேர்த்து மொத்தம் 1250 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. ரஷ்யா, ஜார்ஜியா மற்றும் பிரேசிலின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்திய படம் இரண்டாம் உலகம் தான். படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஆனால் பின்னணி இசையும் இதர சில பாடல்களும் அனிருத்தின் கைவண்ணம்.

Leave A Reply

Your email address will not be published.