நம்பர் வளையத்துக்குள் வந்த நயன்தாரா..!

97

nayanthara-55

பொதுவாக விஜய், அஜித் படங்களின் புதிய படங்களின் டைட்டில் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை, அவர்களது படங்களை விஜய்-55, அஜித்-57 என பெயர் வைத்து அழைப்பதுதான் வழக்கம்.. இதை அவரவர் ரசிகர்கள் உருவாக்கினார்களா, இல்லை ஊடகங்கள் உருவாக்கினவா தெரியவில்லை.. இதில் ஒருபடி மேலாக அஜித் தற்போது நடித்துவரும் படத்திற்கு ‘ஏ.கே-57’ என்கிற அடைமொழியை கொடுத்துள்ளார்கள்..

ஆனால் மற்றெந்த நடிகர்களின் படங்களுக்கும் நம்பரில் டைட்டில் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்கிறபோது, நடிகைகளுக்கா இந்த நம்பர் அடைமொழி கிடைக்கப்போகிறது என்றுதான் அனைவரும் நினைத்தார்கள்.. ஆனால் தற்போது நயன்தாரா நடித்துவரும் பெயரிடப்படாத படத்திற்கு ‘நயன்தாரா-55’ என தற்காலிகமாக டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிக்கவந்து, இந்த 13 வருடங்களில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் சேர்த்து இப்போது 55வது படத்தை எட்டியுள்ளார். இந்தப்படத்தை கோபி நயினார் என்பவர் இயக்கிவருகிறார். இதில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்றிரவு வெளியிடப்பட இருக்கிறது.

Comments are closed.