விக்ரம் படத்தை இயக்குகிறார் ‘வாலு’ இயக்குனர்..!

100

vijay-chandar-vikram

சிம்பு நடித்த ‘வாலு’ படத்தை இயக்கியவர் இயக்குனர் விஜய்சந்தர். அந்த ப்படம் பல இழுபரிகளுக்குப்பின் வெளியானாலும் சூப்பர்ஹிட்டும் ஆகவில்லை.. அதேசமயம் மோசமான படம் என்கிற பெயரையும் வாங்கவில்லை… ஓரளவு வெற்றிப்படமே. அந்தப்படத்தை தொடர்ந்து இப்போது விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கம் வாய்ப்பு விஜய்சந்தருக்கு கிடைத்துள்ளது.

மாறுபட்ட கதாப்பாத்திரங்களில், வித்தியாசமான கதை களங்களில் நடிப்பவர் விக்ரம். இந்த கதைக்களமும் அப்படி மாறுப்பட்ட கதையம்சம் கொண்டது. பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Comments are closed.