சூர்யாவுடன் ஜோடி – ஹாட்ரிக் அடித்தார் நயன்தாரா

167

இங்கே ஒரு ஆச்சர்யமான விஷயத்தை பார்த்துவிட்டு பின்னர் செய்திக்கு செல்வோம். ‘பிரியாணி’யில் தம்பி கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு தனது அடுத்த படத்திலேயே அண்ணன் சூர்யாவை வைத்து இயக்குகிறார். அதேபோல அண்ணன் சூர்யாவை வைத்து ‘அஞ்சான்’ படத்தை இயக்கிவரும் லிங்குசாமி அதை முடித்த கையோடு தனது அடுத்த படமான ‘எண்ணி ஏழு நாள்’ படத்தில் தம்பி கார்த்தியை இயக்குகிறார். என்ன ஒரு பொருத்தம் பார்த்தீர்களா..?

இனி விஷயத்துக்கு வருவோம். ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு டைரக்‌ஷனில் நடிக்க தயாராகிவிட்டார் சூர்யா.. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது யார் என கிளம்பிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘கஜினி’, ‘ஆதவன்’ படங்களைத் தொடர்ந்து சூர்யாவுடன் ஜோடிசேர்ந்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார் நயன்தாரா.

படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அதற்கான தேடுதல் வேட்டை நடந்துகொண்டு இருக்கிறது. இந்தப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர், கலை-ராஜீவன், படத்தொகுப்பு பிரவீன் என பக்காவான கூட்டணியோடு களம் இறங்குகிறார் வெங்கட்பிரபு.

Comments are closed.