விஜய் படத்தை தொடர்ந்து ரஜினியுடன் நடிக்கிறார் சுதீப்..?

158

சுற்றிவளைக்காம்ல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிடுவோம். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் ‘கத்தி’ படத்தில் நடித்துவரும் விஜய் இதை முடித்துவிட்டு அடுத்ததாக சிம்புதேவன் டைரக்‌ஷனில் நடிக்கிறார். இது உறுதியான செய்தி. அதேபோல இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் ‘நான் ஈ’ புகழ் சுதீப்பும் நடிக்கிறார். இதுவும் தற்போது உறுதியாகியுள்ளது. ஒருவேளை அது வில்லனாக கூட இருக்கலாம்.

அதே நேரத்தில் தற்போது கே.எஸ்.ரவிகுமார் டைரக்‌ஷனில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தில் நடிப்பதற்கும் சுதீப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லையாம். காரணம் ஒரு சிறிய தயக்கம் தானாம்..

இதுகுறித்து ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “ரஜினியுடன் நடிக்க அழைப்பு வந்திருப்பது உண்மை. ஒவ்வொருவரும் சாமி கும்பிட கோயிலுக்குள் போகிறோம். ஆனால் அதே கடவுள் நமது முகத்துக்கு நேராக திடீரென வந்தால் நாம் அவரிடம் என்ன கேட்க நினைத்தோமோ அதைக்கூட மறந்து திணறிப்போய்விடுவோம். அதுபோன்றுதான் இப்போது என் மனநிலை விவரிக்க இயலாததாக இருக்கிறது” என்று கூறியுள்ளார் சுதீப்.

ஆனாலும் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் சுதீப் என்று நம்புவோம்.. நாளை(மே-1) கன்னடத்தில் சுதீப் நடித்துள்ள ‘மாணிக்யா’ படம் ரிலீஸாகிறது என்பது கொசுறு தகவல்.

Comments are closed.