
திருவனந்தபுரம், காசர்கோடு, கோழிக்கோடு, திருச்சூர், கண்ணூர், இதோ இப்போ கோச்சி அப்புறம் மலப்புரம்.. எல்லாமே கேரள நகரங்களுடைய பெயராகவே இருக்கிறதே, இதுக்கும் சினிமா செய்திக்கும் என்ன சம்பந்தம் என உடனே அவசரப்பட்டு ஒரு கேள்வியை எழுப்பிவிடாதீர்கள்..
நம்ம ஊரில் மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை, சென்னை என்று சொன்னால் சினிமாவைப்பொறுத்தவரை அதில் பேசப்படும் இந்த ஏரியாக்களின் தமிழ் பாஷை ரொம்பவே பிரசித்தம். ஆனால் நம்ம நடிகர்கள் பலர் பாஷை மாற்றி பேசுகிறேன் என்று காமெடி பண்ணி, அதை காலி பண்ணுவது தனிக்கதை.
இதேபோலத்தான் கேரளாவிலும் மேலே குறிப்பிட்ட நகரங்களுக்கென ஒரு பிரத்யேக மலையாள பாஷை இருக்கிறது. இதில் மேலே கூறிய பாஷைகள் அனைத்தையும் பேசி நடித்தவர் ஒரே ஒருத்தர் தான். அவர்தான் மெகா ஸ்டார் மம்முட்டி. இப்போது தான் நடித்துவரும் ‘மங்கிலிஷ்’ படத்தில் லேட்டஸ்டாக கொச்சின் பாஷையில் அசத்த இருக்கிறார்.
அதேசமயம் இதுவரை இப்படி பாஷைகள் எதுவும் மாற்றி பேசியிராத மோகன்லாலும் தற்போது நடித்துவரும் ‘கூத்தரா’ படத்தில் மலப்புரம் பாஷையில் மலையாளம் பேசியிருக்கிறாரம். கூடவே கர்மயோகி போன்ற அவரது கெட்டப்பும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.
Comments are closed.