தமிழில் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு சுலபமாக மறந்துவிடமுடியுமா? குறிப்பாக அந்த ஒருநாள் முதல்வர் கான்செப்ட் மக்களை ரொம்பவே கவர்ந்துவிட்டது. தமிழில் அர்ஜூன் நடித்த இந்தப்படத்தை 2001ஆம் வருடம் இந்தியில் அனில்கபூரை வைத்து நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஷங்கர். தமிழில் கிடைத்த வரவேற்பு இந்தியில் கிடைக்கவில்லை என்றாலும் அனில்கபூரின் கேரியரில் மிக முக்கியமான படமாக இது அமைந்தது.
12 வருடங்களுக்கு முன் நாயக் படத்தை தயாரித்தவர்கள், தற்போது ‘நாயக் ரிட்டர்ன்ஸ்’ என்ற பெயரில் நாயக் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதில் நடிப்பவர்கள் மற்றும் இந்தப்படத்தை இயக்குபவர் யார் என்பது விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகுமாம்.