1976ஆம் வருடம் ஜப்பானில் உள்ள ஃபியூஜியில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின்போது, பந்தயத்தில் கலந்துகொண்ட இரண்டு வீரர்களுக்குள் மோதல் வெடித்தது. அது கடைசியில் ஒருவர் இன்னொருவரை கொலை செய்யும் அளவிற்கு கொண்டுபோய்விட்டது. இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தற்போது ஹாலிவுட்டில் ‘ரஷ்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. இரண்டுமுறை ஆஸ்கர் விருது வென்ற ரோன் ஹோவர்டு இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
ஜேம்ஸ் ஹண்ட் மற்றும் நிக்கி லவுடா என்ற இரண்டு வீரர்களுக்கு இடையேயான பகையையும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையும் மையப்படுத்தி இதன் கதையை எழுதிருக்கிறார் பீட்டர் மார்கன். இவரும் இரண்டுமுறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்தான். இந்தப்படத்தில் க்ரிஷ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் டேல்னியல் ப்ரல் இருவரும் கார் பந்தய வீரர்களாக நடித்துள்ளார்கள். இன்று இந்தப்படம் வெளியாகிறது.