ரஜினி கமல் நடித்து 34 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ’நினைத்தாலே இனிக்கும்’ படத்தை டிஜிட்டல் வடிவில் மறு வெளியீடு செய்கிறது ராஜ் டிவி.
இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல்ஹாசன், உட்பட திரையுலகினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய கமல், “என்னை எல்லோரும் சிறந்த இயக்குனராக சொல்கிறார்கள். எனக்கு தெரிந்த சினிமா, தொழில்நுட்பம் எல்லாமே பாலசந்தரிடம் தான் கற்றுக்கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் என்னை விட சிறந்த நடிகர் பாலசந்தர். பிரமாதமாக நடித்துக் காண்பிப்பார். எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. அது அவரை நடிக்க வைத்து நான் இயக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று நினைக்கிறேன். அவருடைய அனுமதி கிடைத்த பிறகு முறைப்படி அறிவிக்கலாம் என்று இருக்கிறேன். அவருடன் நானும் சேர்ந்து நடிக்கப் போகிறேன்.” என்று பலத்த கரகோசத்திற்கிடையே பேசினார் கமல்.