கலாட்டா மீடியா தங்களது ‘ஜி’ ஸ்டுடியோ சார்பாக நவரசம் என்ற குறும்படத்தை தயாரித்துள்ளது. இந்த குறும்படத்தை ரங்கா, தீரஜ் வைத்தி என இருவர் இணைந்து இயக்கியுள்ளார்கள். அரவிந்த் சுவாமிநாதன் ஒளிப்பதிவு செய்ய, தயானந்த் பிறைசூடன் இசையமைத்துள்ளார்.
கோபம், மகிழ்ச்சி, வருத்தம் என ஒன்பது விதமான உணர்ச்சிகளையும் இந்த குறும்படத்தில் உள்ளடக்கி கதையை அமைத்திருப்பதால் நவரசம் என தலைப்பு வைத்துள்ளார்களாம். நாளை(ஆக-31) இந்தப்படத்திற்கான சிறப்புகாட்சி மாலை 3 மணிக்கு வடபழனி ஆர்.கே.வி ஸ்டுடியோவில் திரையிடப்படுகிறது.