சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் ஜோடியாக மதகஜராஜா படத்தில் நடித்த அஞ்சலி, அந்தப்படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகவும், படம் சம்பந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இன்னொரு பக்கம் ஒரு தெலுங்கு தயாரிப்பாளருடன் இணைத்தும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்தன.
“இது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் அஞ்சலி. மேலும் இனிமேலும் தன்னைப்பற்றி வரும் தவறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “இனிவரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவைப்படும் என்றால் என்னுடைய மின்னஞ்சல் முகவரியான newsfromanjali@gmail.com ல் தொடர்பு கொண்டு உண்மை என்ன என்பதை என்னிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என அன்புடன் பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.