நவ-25ல் நரகாசூரன் டீசர் ரிலீஸ்..!

102

naragasooran teaser release date

துருவங்கள் பதினாறு என்கிற தனது முதல் படம் மூலமாக தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாக துவக்கியவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.. அதனாலேயே அடுத்ததாக இவர் இயக்கிவரும் ‘நரகாசூரன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு இருமடங்காகி உள்ளது. அத்துடன் இதில் இடம்பெற்றுள்ள நட்சத்திர கூட்டணியும் பிரமிப்பை உருவாக்கவே செய்திருக்கிறது.

இந்தப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன் மற்றும் மலையாள நடிகரும் பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரேயா கதாநாயகியாக நடிக்கிறார். “நரகாசூரன் படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம்.. புதிய சினிமா மொழியில் இதன் கதையும் பட உருவாக்கமும் அமைந்துள்ளது. பார்வையாளர்களை பல ஆச்சர்யங்களுக்கு இந்தப்படம் ஆளாக்கும்” என சமீபத்தில் இந்தப்படத்தை பற்றி சிலாகித்து பேசியுள்ளார் நடிகர் இந்திரஜித்.

அதன் வெள்ளோட்டமாக வரும் நவ-25ல் நரகாசூரன் படத்தின் டீசர் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Comments are closed.