தேனி மாவட்ட கிராமங்களில் இரவு நேரம் சுற்றியலைந்த ‘யாகன் ஹீரோ..!

129

yaagan hero

‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் தான் ‘யாகன்’.. வினோத் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக டென்மார்க் தமிழரான சஜன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்க, முனீஸ் ராஜா, தவசி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருத்தொருத்தர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதையும் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ளது இந்த ‘யாகன்’

ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பாக நடித்தேன். எந்த அளவுக்கு என்றால் அந்தக்காட்சிகளை படமாக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் என் தந்தை நிற்கிறார் என்பதே எனக்கு மறந்துபோகும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளேன்.. படக்குழுவினர் கூட எனக்கும் கதாநாயகிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாக பாராட்டினார்கள்.

சண்டைக்காட்சிகள் தான் என்னை பெண்டு நிமிர்த்திவிட்டது.. ஒருமுறை மேலிருந்து ஜம்ப் பண்ணும்போது என் கழுத்தை சுற்றி கயிறு வீசும் காட்சி படமாக்கப்பட்டது. முதல் தடவை பண்ணும்போது டைமிங் கொஞ்சம் மிஸ்ஸாகி கயிறு என் கழுத்தை இறுக்கி கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பினேன்.. ஆனால் அடுத்த காட்சியிலேயே அதில் வெற்றிகரமாக நடித்து முடித்து மாஸ்டரிடம் பாராட்டு பெற்றேன்..

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் தான் நடந்தது. நான் இலங்கை தமிழர் என்பதால் நான் பேசும் தமிழுக்கும் இங்கே உள்ள தமிழுக்கும் குறிப்பாக கிராமத்தில் உள்ள பேச்சு வழக்கு தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தேன். அதனால் படப்பிடிப்பு நடந்த கிராமங்களில் மதிய, இரவு நேரங்களில் அப்படியே கிராமத்தை சுற்றி, அங்குள்ள மக்களுடன் பேசிப்பழகி ஓரளவு எனது பேச்சுமுறையை மாற்றிக்கொண்டேன்.. இது முதல் படம் என்பதால் எனக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசியுள்ளார்.. அடுத்தடுத்த படங்களில் நானே டப்பிங் பேசும் அளவுக்கு மாறிவிடுவேன்” என்கிறார் சஜன்…

Comments are closed.