நடிகர் ஆர்யா சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதன. இவருடன், இவருக்குப்பின்னால் திரைக்கு வந்த ஹீரோக்கள் பலரும் திருமணம் என்கிற பந்தத்தில் நுழைந்து விட்டனர். ஆர்யாவும் விஷாலும் மட்டுமே இன்னும் பேச்சிலர்களாகவே சுற்றி வருகின்றனர்..
விஷால் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்தபின் தான் தனது திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் ஆர்யா அப்படி எதுவும் சபதம் செய்யாத நிலையில், தனது திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். இதற்கிடையே நடிகைகளில் ஒருத்தரை திருமணம் செய்யப்போகிறார் என்கிற கிசுகிசுக்களும் அவ்வப்போது எழுந்தன.
இந்தநிலையில் சமீபத்தில் ஆர்யா, தனது திருமணம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதை உறுதி செய்யும் விதமாக தனது திருமணம் குறித்து தற்போது ஆர்யா மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஆம் நான் திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கிறேன். மேலும் உங்களுக்கு என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்றால் 73301 73301 என்ற எண்ணுக்கு போன் செய்யுங்க என கூறியுள்ளார். இதில் விளையாட்டு எதுவுமில்லை.. சீரியஸாகத்தான் சொல்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments are closed.