“நாங்க எல்லாம் அப்பவே அப்படி” – பிரபுவின் மகளாக நடிக்கும் ஹன்சிகா

85

தமிழில் இப்போது ஹன்சிகாவின் சீசன். விவரமானார்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் பல மொழி மாற்றுப் படங்களை தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் எஸ்.சுந்தரலட்சுமியும் செய்திருக்கிறார். யெஸ்.. ஹன்சிகா நடித்து தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற “தேனிகா நானா ரெடி” என்ற படம் இப்போது தமிழில் ”நாங்க எல்லாம் அப்பவே அப்படி” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

தனது தங்கை இன்னொரு மதத்தை சேர்ந்தவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டதால் கோபப்பட்ட பிரபுவின் ஆட்கள் சுமனின் காலை வெட்டி விடுகிறார்கள். அதனால் பிரபுவிற்கும் தங்கை கணவர் சுமனுக்கும் மோதல் அதிகமாகிறது. அந்த இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க ஒரு இளைஞன் வருகிறான் அவனுக்கு பிரபு மகளுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் கதை.

கதாநாயகனாக விஷ்ணு மோகன்பாபு நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்க, மற்றும் சீதா, சுமன், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ், ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தை நாகேஸ்வர ரெட்டி இயக்கியுள்ளார். இருநூறுக்கும் மேற்பட்ட படங்களை தமிழாக்கம் செய்துள்ளார் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருக்கிறார் ஏ.ஆர்.கே.ராஜராஜா. இந்தப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.