திரையுலகில் எந்தவித பின்புலமும் இல்லாமல் தனது சொந்தத் திறமை மூலமாக ஹீரோவாக முன்னேறியவர் நடிகர் விமல். இதனாலேயே அவரது காதல் திருமணம் கூட பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தான் நடைபெற்றது. இவரது காதல் மனைவியின் பெயர் பிரியதர்ஷினி. கடந்த 2011ல் ரஜினி பிறந்தநாளின்போது தான் இவர்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ‘ஆரிக்’ என பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை மதுரையில் அவரது மனைவி பிரியதர்ஷினி இரண்டாவதாக மீண்டும் ஒரு அழகான ஆண் குழந்தையை(07:19) பெற்று எடுத்துள்ளார். தனக்கு மீண்டும் ஒரு ஆண்குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் விமல்.