தனுஷ், 3 படத்தில் தான் பாடிய கொலவெறி பாடல் சூப்பர் ஹிட்டானதிலிருந்து, தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதோடு படங்களுக்கு பாடல்களும் எழுதிவருகிறார். அந்த வரிசையில் நய்யாண்டி படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஜிப்ரான் இசையில் இதற்கான ஒலிப்பதிவு சமீபத்தில்தான் நடந்து முடிந்தது.
இதுவரை தான் பாடிய பாடல்களிலிருந்து நய்யாண்டி படத்திற்காக பாடியுள்ள இந்தப்பாடல் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ். சற்குணம் இயக்கிவரும் இந்தப்படத்தில் நஸ்ரியா நசீம் ஹீரோயினாக நடிக்கிறார். காமெடியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.