டைரக்டர் அமீரின் உதவியாளர் துரைவாணன் இயக்கும் படம் யாசகன். இதில் ஹீரோவாக அங்காடித்தெரு படத்தில் நடித்த மகேஷ் நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த நிரஞ்சனா கதாநாயகியாக நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி, மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இணைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.
ஊருக்கே நல்ல பிள்ளையாக திரிந்த ஒருவன், காதலால் ஊரே ஒதுக்கி வைக்கும் யாசகன் ஆகிறான். காதல் அப்படி என்ன செய்தது என்று ஆராய்ச்சி செய்வதுதான் திரைக்கதையாம்.
சதீஷ் சக்கரவர்த்தி இசையமைத்த இப்படத்தின் பாடல்களை சமீபத்தில் இயக்குனர் அமீர் வெளியிட இயக்குனர்கள் சசிகுமார், கே.வி.ஆனந்த், சசி, எஸ்.ஆர்.பிரபாகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சசிகுமாரும், துரைவாணனும் மெளனம் பேசியது படத்தில் அமீரிடம் உதவியாளர்களாக வேலைபார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.