நடிகைகள் புத்தகம் எழுதுவது இப்போது ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு தான் மலையாள நடிகை நவ்யா நாயர், தனது நிஜவாழ்க்கை, சினிமா வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ‘நவ்யா ரசங்கள்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதி இருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டின் பிரபல நடிகையான கரிஷ்மா கபூரும் தற்போது புத்தகம் ஒன்று எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் ‘மை யம்மி மம்மி கைடு’.
இந்தப்புத்தகத்தில் குழந்தை பெறப்போகும் அம்மாக்களுக்கு தேவையான டிப்ஸ்களை அள்ளித் தெளித்திருக்கிறார் கரிஷ்மா. குறிப்பாக குழந்தை பெற்ற பின்பும் ஸிலிம்மாக இருப்பது, முக அழகை பரமாரிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, வேலைக்கு சென்றுகொண்டே குழந்தைகளை பராமரிப்பது என விரிவாகவும் சுவராஸ்யமாகவும் எழுதியிருக்கிறார் கரிஷ்மா. புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.