டைரக்டர் சிங்கிதம் சீனிவாசராவ் என்றால் சினிமா அகராதியை பொறுத்தவரை வித்தியாசமா முயற்சி பண்றவர்னு அர்த்தம். அந்த அளவுக்கு தன்னோட படங்களில் ஏதாவது புதுமையான விஷயங்களை புகுத்தி ரசிகர்களை அசரவைத்து விடுவார். கமலின் ஆஸ்தான டைரக்டர்களில் ஒருவரான இவர், பெரும்பாலும் தன்னுடைய பரிசோதனை முயற்சிகளுக்கு கமலையும் உதவிக்கு அழைத்துக்கொள்வது வழக்கம். தமிழில் அபூர்வ சகோதரர்கள், தெலுங்கில் புஷ்பக விமானம் என பிளாக் பஸ்டர் ஹிட்டுகள் எல்லாம் இப்படி உருவானவை தான்.
இப்போது சிங்கிதம் சீனிவாசராவ் ‘பிரீ ரெக்கார்டெட் மூவி’ என்கிற இன்னொரு வித்தியாசமான பரிசோதனை முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தமுறைப்படி படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னரே படத்தின் வசனங்கள், பின்னணி இசை, சவுண்ட் எஃபெக்ட்ஸ் என அனைத்தையும் சிங்கிள் ட்ராக்காக பதிவு செய்துகொள்ள முடியுமாம். இதனால் படத்தில் நடிக்கும் நடிகர்கள் எந்த மொழியைசேர்ந்தவர்களாக இருந்தாலும் ஈசியாக நடித்துவிட்டு போகலாம். உலக அளவிலேயே இதுதான் முதல் முயற்சி என்பது சிங்கிதம் சீனிவாசராவ் நமக்கு பெற்றுத் தந்திருக்கும் பெருமை.