இரண்டு ஆஸ்கர் விருதுகள். இரண்டு கிராமி விருதுகள், ஒரு கொல்டன் குளோப் விருது, நான்கு முறை தேசிய விருதுகள், 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட இன்னும் பட்டியலில் அடங்காத பல விருதுகளுக்கு சொந்தக்காரரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நாம் அளித்திருக்கும் கௌரவம் தான் ‘இசைப்புயல்’ பட்டமும் ‘மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற பட்டமும்.
நம்ம ஊர்க்காரர் நாம் தூக்கி வைத்துக்கொண்டாடுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால் கனடா நாட்டினர் இவருக்கு அளித்துள்ள கௌரவத்தை பார்க்கும்போதுதான் நமக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படுகிறது. கனடாவில் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள மர்க்காம் என்ற ஊரில் உள்ள ஒரு தெருவிற்கு அல்லா-ரக்கா ரஹ்மான் தெரு என ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை சூட்டியிருக்கிறார்கள். ரஹ்மானும் தாங்க முடியாத சந்தோஷத்தில் ‘வெல்கம் மை ஸ்ட்ரீட்!’ என ட்வீட் செய்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.