சரியான ரூட்டில் பயணிக்கிறாரா விக்ரம் பிரபு?

57

பொதுவாக ஒரு படத்தில் அறிமுகமாகும் இளம் நடிகர்கள் அடுத்தடுத்து படங்களை உடனே ஒப்புக்கொள்வதில்லை. ஒரு படத்தை முடித்துவிட்டு அதன்பிறகே அடுத்த படத்திற்கு போவார்கள். ‘பாணா காத்தாடி’ படத்தில் அறிமுகமான அதர்வா, அதன்பிறகு ‘முப்பொழுதும் உன் கற்பனைகள், அடுத்ததாக ‘பரதேசி’ ஆகிய படங்களுக்கு இடையே சீரான இடைவெளி விட்டார்.

ஆனால் விக்ரம் பிரபுவோ இதற்கு நேர்மாறான ரூட்டில் போய்க்கொண்டு இருக்கிறார். கடந்த வருடம் அவர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கும்கி’ படத்திற்கும் விரைவில் வெளியாக இருக்கும் ‘இவன் வேற மாதிரி’ படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளி இருப்பது உண்மைதான்.

ஆனால் தற்போது அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் படங்களின் பட்டியலோ பெரிதாகவே இருக்கிறது. அரிமா நம்பி, சிகரம் தொடு படங்களில் நடித்துவரும் விக்ரம்பிரபு அடுத்ததாக ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

தொடர்ந்து கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்திற்கு ‘தலப்பாக்கட்டி’ என பெயர் வைத்துள்ளார்கள். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி, தம்பிராமையா ஆகியோர் நடிக்கிறார்கள்.

வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டாலும் கதையில் கவனம் செலுத்துவதன் மூலமும், ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிப்பதன் மூலமும் மட்டுமே தொடர் வெற்றிகள் சாத்தியமாகும் என்பது சினிமா சொல்லும் உண்மை.

Leave A Reply

Your email address will not be published.