“கண்டாங்கி.. கண்டாங்கி..” – விஜய்யின் பொங்கல் வாழ்த்து

77

தலைவா படத்தில் “வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா..” என விஜய் பாடிய பாடல்தான் அந்தப்படத்தின் சூப்பர்ஹிட் பாடல். விஜய் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவார். இப்போது மீண்டும் டி.இமானுடன் சேர்ந்திருக்கிறார். இமான் சும்மா விட்டுவிடுவாரா விஜய்யை? ‘ஜில்லா’ படத்திலும் ஒரு பாட்டு பாடியே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றுவிட்டார்.

அப்புறம் என்ன? ‘ஜில்லா’வுக்காக “கண்டாங்கி.. கண்டாங்கி” என ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து விஜய் பாடியிருக்கும் இந்தப்பாடல்தான் விஜய் ரசிகர்களுக்கு 2014ஆம் ஆண்டின் பொங்கல் வாழ்த்தாக இருக்கப்போகிறது. இந்தப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார் என சாதாரணமாக சொல்லிவிட்டு போய்விட முடியாது.

காரணம்.. விஜய் நடிக்கும் ஜில்லா படத்திற்கு வைரமுத்து பாட்டு எழுதுகிறார் என்றால் சாதாரண விஷயமா? அதுவும் 2002ல் வெளியான ‘யூத்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து வைரமுத்து மீண்டும் விஜய்க்கு பாடல் எழுதுவது அதிசயமான நிகழ்வுதான். எப்படி இந்த இடைவெளி விழுந்தது என்பதுதான் புரியாத புதிர்.

ஜில்லா படத்தின் இயக்குனர் நேசனும் இசையமைப்பாளர் டி.இமானும் இணைந்துதான் வைரமுத்துவை இந்தப்படத்திற்குள் இழுத்து வந்திருக்கிறார்கள். எது எப்படியோ இனி வைரமுத்து-விஜய் காம்பினேஷன் இடைவெளியில்லாமல் தொடரட்டும்.

Leave A Reply

Your email address will not be published.