முருகதாஸின் தம்பி நடிக்கும் புதிய படம் ‘குத்தூசி’

72

முதல் படம் பெரிய அளவில் வரேற்பை பெறவில்லை என்பதற்காக அவரை அப்படியே விட்டுவிடமுடியுமா என்ன? ‘வத்திக்குச்சி’ படத்தில் நடித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபனை பற்றித்தான் சொல்கிறோம். இப்போது மீண்டும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் திலீபன். படத்தின் பெயர் ‘குத்தூசி’

இந்தப்படத்தை சீனுராமசாமியிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்த சிவசக்தி என்பவர் இயக்குகிறார்.

Related Posts

படத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் திலீபன். சமூகத்துக்கு கருத்து சொல்லும் படம் தான் என்றாலும் அதை நேரடியாக சொல்லாமல் கதாநாயகன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் சொல்கிறார்களாம்.

பத்துநாட்கள் கொண்ட முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருகிறது. இதை முடித்துவிட்டு கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்கள். படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் இடைவேளையிலும், க்ளைமாக்ஸிலும் ஆக்‌ஷன் ஹெவியாக இருக்குமாம்.

Leave A Reply

Your email address will not be published.