கேபிள் சங்கர் இயக்கியுள்ள ‘தொட்டால் தொடரும்’..!

97

படத்தை விமர்சனம் பண்ணும்போதெல்லாம் “உங்களுக்கென்ன ஈஸியா விமர்சனம் பண்ணிட்டு போயிடுவீங்க. படத்தை டைரக்ட் செஞ்சு பார்த்தா தானே அந்த கஷ்டம் தெரியும்”னு பல டைரக்டர்கள் புலம்பி பார்த்திருப்பீங்க. ஒரு விழாவுல இயக்குனர் அமீர் கூட “எல்லா படங்களுக்கும் 40ல இருந்து 44 மார்க் வரைக்கும் தான் போடுறீங்க. அப்ப எது 90 மார்க், 100 மார்க் வாங்குற கதைன்னு உங்களுக்கு நல்லாவே தெரியுது. அதை எங்ககிட்ட கொடுங்க. நான் ஃப்ரீயாவே டைரக்ட் பண்ணி தர்றேன்”னு விரக்தியா சொன்னாரு.

அந்த அளவுக்கு விமர்சனம்ங்கிற பேர்ல நம்ம ஆளுங்க சிலர் வர்ற படத்தையெல்லாம் போட்டுத்தாக்குவாங்க. அப்படி ஒரு வசிஷ்ட முனிவர்தான் இணையதள விமர்சகரான நம்ம கேபிள் சங்கரும். ஒவ்வொரு படத்தையும் அக்குவேறா, ஆணிவேறா பிரிச்சு மேய்ஞ்சுடுவாரு.

இப்ப அவரே ஒரு படத்தை டைரக்ட் பண்ணி முடிச்சிட்டாரு. படத்தோட பேரு ‘தொட்டால் தொடரும்’. இந்தப்படத்தில் ஹீரோ தமன் மற்றும் ஹீரோயின் அருந்ததி தவிர அனைவரும் முழுக்க முழுக்க புதுமுகங்கள் தான். க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்தப்படத்தை துவார் சந்திரசேகர் தயாரித்துள்ளார். இது இவர் தயாரிக்கும் ஐந்தாவது படம். கேபிள் சங்கர் படம் வரட்டும். அதையும் பார்த்துடுவோம் என பல சினிமா இயக்குனர்களும் சக பத்திரிகையாளர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.