வழக்கு எண் படத்தில் அறிமுகமாகி தற்போது சமீபத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படத்தின் மூலம் புகழ்வெளிச்சத்திற்கு வந்திருப்பவர் மனீஷா யாதவ். புகழ் வரும்போது பிரச்சனைகளும் கூடவே வரத்தானே செய்யும். மனீஷாவின் பெயரில் தற்போது சமூக வலைதளங்களில் இருக்கும் கணக்கு போலியானது என்றும் தான் எந்த் ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்றும் அதில் வெளியாகும் செய்திகளையும் குறிப்பிடப்படும் கமெண்டுகளையும் நம்பவேண்டாம் என்றும் மனீஷா தெரிவித்துள்ளார். மேலும் தன் பெயரில் போலியான பெயரில் உலாவருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸில் புகார் அளித்துள்ளாராம் மனீஷா.
Prev Post