‘ஐ’ படத்தில் மதன்கார்க்கிக்கு அடித்த ஜாக்பாட்

47

ஷங்கர் டைரக்‌ஷனில் விக்ரம் நடித்துவரும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. இன்னொருபக்கம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் பதிவும் கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் மதன்கார்க்கி. ஏற்கனவே எந்திரன் படத்தில் மதன் கார்க்கி எழுதிய ‘இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ’ பாடல் வரிகளில் அசந்துபோன ஷங்கர் நண்பன் படத்தை தொடர்ந்து இந்தபடத்தில் மதன் கார்க்கிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே மதன் கார்க்கி எழுதிய இரண்டு பாடல்களின் ரெக்கார்டிங் முடிந்துவிட்ட நிலையில் மூன்றாவது பாடல் சமீபத்தில்தான் ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இவர் எழுதியுள்ள பிரார்த்தனை பாடல் ஷங்கரையும் ஏ.ஆர்.ரகுமானையும் ரொம்பவே கவர்ந்துவிட்டதாம். இந்த தகவலை தனது ட்விட்டர் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் மதன்கார்க்கி.

Leave A Reply

Your email address will not be published.