தான் ஆரம்பித்துள்ள விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தற்போது பாண்டியநாடு படத்தை சுசீந்திரன் டைரக்ஷனில் தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இதைத் தொடர்ந்து அடுத்து தயாரிக்கும் படத்தில் தான் நடிக்காமல் நடிகர் ஜெய்யை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார் விஷால். இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பு டைரக்டர் ‘திரு’வுக்கு கிடைத்திருக்கிறது.
இதுவரை திரு இயக்கிய தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் சமர் ஆகிய படங்களில் விஷால்தான் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில்தான் தனது நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பை திருவுக்கு கொடுத்திருக்கிறார் விஷால்.
இந்தப்படத்தில் தம்பி ராமையா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். கதாநாயகி தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபர் மாதம் பக்ரீத் பண்டிகை தினத்தன்று துவங்க திட்டமிட்டுள்ளார்கள்.