விஜய் மோகன்லாலுடன் சேர்ந்து நடித்து வருவது தெரியும். மம்முட்டியுடன் நடிக்கிறார் என்பது புதுசா இருக்கே என்று உங்களுக்கு தோன்றும். மலையாளத்தில் ‘கேங்ஸ்டர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் மம்முட்டி. இந்தப்படத்தை ஆஷிக் அபு இயக்கிவருகிறார். இவர்தான் ’22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர்.
அவருக்கு தனது படத்தில் ஒரு பாடலுக்கு விஜயை ஆடவைத்துவிட வேண்டும் என்பது ஆசை. அதற்கான தீவிர முயற்சியிலும் இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கடைசிவரை சஸ்பென்ஸாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார் ஆஷிக் அபு. விஜய்யும் இந்தப்படத்தில் நடிப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது.
காரணம் ‘ரவுடி ரத்தோர்’ என்ற இந்திப்படத்தில் அக்ஷய்குமாருடனும் பிரபுதேவாவுடனும் சேர்ந்து சும்மா லைட்டாக ஆடிவிட்டுப் போனார் விஜய். அதே மாதிரி மம்முட்டி, திலீப் நடித்து கடந்த வருடம் வெளியான ‘கம்மத் & கம்மத்’ என்ற மலையாளப்படத்தில் தனுஷ், நடிகர் தனுஷாகவே சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அது தனுஷுக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனால் விஜய்யும் மம்முட்டியின் படத்தில் டான்ஸ் ஆடினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.