ஆந்திராவில் வரும் ஜனவரியில் சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறது மகேஷ்பாபுவின் புதிய படம். மகேஷ்பாபு தற்போது ‘1-நேனோக்கடினே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில், மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் கீர்த்தி சனான். சாயாஜி ஷிண்டே தான் வில்லன்.. ஆந்திர ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில், திரைக்கதையில் மசாலா பொடி தூவியுள்ளார் படத்தின் இயக்குனர் சுகுமார்.
இந்தப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அதனால் வரும் டிசம்பர்-22ஆம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்திவிடலாம் என முடிவு செய்துள்ளார்கள். காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த கலவையாக எடுக்கப்பட்டு வரும் இந்த படம் மகேஷ்பாபு தன் ரசிகர்களுக்கு படைக்கவுள்ள செமத்தியான விருந்தாக இருக்குமாம். இந்தப்படத்தை ஜனவரி 14ல் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.