மகேஷ்பாபுவுக்கு தமிழில் ஒரு நிலையான இடம் ; ‘வலைவிரிக்கும் ஸ்பைடர்’..!

339

தெலுங்கு சினிமாவின் இளவரசன் என அழைக்கப்படும் மகேஷ்பாபு இதுவரை நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், தமிழ்நாடு முழுவதும் தனது டப்பிங் படங்களால் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதோ இப்போது நேரடியாகவே ‘ஸ்பைடர்’ படம் மூலம் தமிழ்சினிமாவில் கால் பதிக்கவுள்ளார்.

அதிலும் ஏ.ஆர்.முருகதாஸின் டைரக்சனில் களம் இறங்குவது கூடுதல் பலம்.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன் தினம் கலைவாணர் அரங்கில் நடந்தபோது மகேஷ்பாபுவை காண அங்கே கூடிய ரசிகர்கள் கூட்டம் மிரள வைத்தது.

‘ஸ்பைடர்’ மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் பட்சத்தில் இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு மகேஷ்பாபு சக போட்டியாளராக செம டப் கொடுப்பார் என விழாவில் கலந்துகொண்ட பலரும் பேசினார்கள். வரும் செப்-27ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.

Comments are closed.