படத்துக்குப் படம் தனது இசையின் மூலம் பாடல்களில் ஏதாவது வித்தியாசம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார் அனிருத். ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கித் தந்த அனிருத், இப்போது ‘மான் கராத்தே’ படத்திலும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் இந்தப்பட்த்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான திருக்குமரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் இடம்பெறும் கானா பாடலுக்கு தேவாவை அழைத்து பாடவைத்த அனிருத், கூடவே தானும் சேர்ந்து இந்தப்பாடலை பாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல ஸ்ருதிஹாசனும் இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் மார்ச்-1ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள்.
.