நீட் தேர்வு எனும் கொடிய அரக்கன் தனது எதிர்கால மருத்தவ கனவுக்கு உலைவைக்க வந்ததால் அனிதா எனும் மாணவி தனது உயிரை தானே மாய்த்துக்கொண்டார். இது தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திரையுலகில் இயக்குனர்கள் அனைவரும் ஒன்றுகூடி அனிதாவிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி தங்களது துக்கத்தையும் நீட் தேர்வுக்கான எதிர்ப்பையும் வெளிப்படுத்தினார்கள்.
திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் அனிதாவின் மரணத்திற்கு தங்களது இரங்கலை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் அனிதாவின் வீட்டிற்கே நேரில் சென்று அனிதாவின் தந்தை உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் அளித்து விட்டு வந்துள்ளார்.

Comments are closed.