நஸ்ரியாவுக்கு மட்டும் தான் டபுள் ஜாக்பாட் சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுமா..? ஏன் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுக்கு இருக்கக்கூடாதா என்ன.? ஆனால், இது வேறு வகையான சென்டிமெண்ட். இவருக்கும் நடிகர் பிஜுமேனனுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி கலந்த சென்டிமெண்ட்.
ஹீரோ-ஹீரோயினுக்கு மட்டும் தான் கெமிஸ்ட்ரி ஒத்துப்போக வேண்டும் என ஏதாவது ரூல்ஸ் இருக்கிறதா..? இதே கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லையென்றால் குஞ்சாக்கோ போபனும் பிஜுமேனனும் கடந்த இரண்டு வருடங்களில் ஏழு படங்களில் சேர்ந்து நடித்திருக்க முடியுமா?இல்லை இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே மீண்டும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கத்தான் முடியுமா.?
மற்ற படங்களைக் காட்டிலும் 2012ல் வெளியான பிளாக்பஸ்டரான ‘ஆர்டினரி’ மற்றும் 2013ல் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பிய ‘ரோமன்ஸ்’ என இரண்டு படங்களிலும் இவர்கள் தான் கதாநாயகர்களாக கூட்டணி அமைத்து காமெடி ராஜாங்கம் நடத்தியிருந்தார்கள்.
இப்போது ‘பையா பையா’ என்ற படத்தில் மீண்டும் இவர்கள் இருவரும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள். பிருத்விராஜையும் நம்ம சசிகுமாரையும் வைத்து மலையாளத்தில் ‘மாஸ்டர்ஸ்’ என்ற படத்தை இயக்கிய ஜானி ஆண்டனிதான் இந்தப்படத்தை இயக்குகிறார்.