சென்னை, மதுரை, கோவை பாஷை என தமிழ்நாட்டில் பல பஷைகளில் பேசுவதைப்போல மலையாளத்திலும் வெவேறு விதமான பாஷைகளில் மக்கள் பேசுவதுண்டு.. அதில் குறிப்பாக பிரபலமானவை என்றால் கோழிக்கோடு, திருவனந்தபுரம், காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் தான். கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கும்.
மலையாளத்தில் எவர்கிரீன் சூப்பர்ஹிட் என்று சொல்லப்படுகிற ‘ராஜாமாணிக்கம்’ படத்தில் மம்முட்டி பேசிய திருவனந்தபுரம் பாஷையை ரசிக்காதவர் கேரளாவில் பாக்கி இருக்கமாட்டார்கள். அதேபோலத்தான் ‘ஆர்டினரி’ படத்தில் பஸ் ட்ரைவராக நடித்த பிஜுமேனன் பாலக்காடு பாஷையில் பேசியதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு பிஜுமேனனுக்கு பாராட்டுக்களையும் குவித்தது.
தற்போது பிஜுமேன்ன் ‘வெள்ளிமூங்கா’ என்ற படத்தில் காஞ்சிரப்பள்ளி பாஷையில் பேசி நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் 42 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாத அரசியல்வாதி கேரக்டரில் நடிக்கிறார் பிஜுமேனன். ‘வெள்ளிமூங்கா’ என்பது காட்டில் வாழும் ஒரு அரியவகை ஆந்தை ஆகும்.
Comments are closed.