தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம்சரணுடன் ஜோடி சேருவதில் ஹாட்ரிக் சாதனை செய்யவிருக்கிறார் காஜல் அகர்வால். ராஜமௌலி டைரக்ஷனில் வெளியான ‘மகதீரா’ படத்தில் இருவரும் இணைந்து நடித்ததும் படம் சூப்பர் டூப்பர்ஹிட் ஆகி இருவரும் ராசியான ஜோடி என பெயர் எடுத்ததும் பழைய, ஆனால் சுவையான வரலாறு. இந்த ராசிதான் ராம்சரண், காஜல் இருவரையும் இந்த வருடம் வி.வி.விநாயக் டைரக்ஷனில் ‘நாயக்’ என்ற படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கவைத்தது.
இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக இந்த ஜோடி ஒரு படத்தில் இணைகிறது. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்குகிறார். வரும் ஜனவரி-18ஆம் தேதி முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் நடிக்க இருக்கும் ராம்சரண். நீளமான முடியை பின்னி முடிச்சிட்டு ஒரு வால் போல தொங்கவிட்டுள்ளார். அதே ஹேர்ஸ்டைலுடன் தான் சமீபத்தில் நடைபெற்ற அவர் நடித்த ‘எவடு’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிலும் கலந்துகொண்டார்.