கிருத்திகா உதயநிதியின் பரிகாரம்

53

யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமலேயே வெற்றிகரமாக வணக்கம் சென்னை படத்தை இயக்கி முடித்துவிட்டார் கிருத்திகா உதயநிதி. சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடித்துள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர்-11ல் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தின் ரிலீஸ் சம்பந்தமான வேலைகளில் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறார் கிருத்திகா.

மேலும் படத்தின் புரமோஷன் சம்பந்தமாகவும் பலவிதமான யோசனைகளை செயல்படுத்த இருக்கிறாராம் கிருத்திகா. அதன் ஒரு பகுதியாக 500 மரக்கன்றுகளை நடும் திட்டமும் இருக்கிறதாம். தாங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது தங்களது படப்பிடிப்பு சாதனங்களால் காற்றில் கரியமில வாயு கலந்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு ஒருவகையில் உடந்தையாய் இருந்திருக்கிறோம் என்பதாக ஃபீல் செய்திருக்கிறார் கிருத்திகா. அதனால் அந்த தவறை நிவர்த்தி செய்து, அதற்கு பரிகாரம் செய்யும் விதமாகத்தான் இந்த மரக்கன்றுகள் நடும் ஏற்பாடாம்.

Leave A Reply

Your email address will not be published.