குழந்தையிலிருந்தே தனது அபிமான நடிகைகளான ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், கஜோல், ஐஸ்வர்யாராய், அசின் மற்றும் கரீனா ஆகியோரை லக்ஸ் சோப் விளம்பரத்தில் பார்த்து வளர்ந்த சமந்தாவுக்கு, இப்போது லக்ஸ் நிறுவனத்தின் விளம்பரப்படத்தில் நடிக்கும் வாய்ப்பே தேடி வந்திருக்கிறது.
இந்த விளம்பரத்தில் தனது மனம் கவர்ந்த நாயகன் சித்தார்த்துடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம் சமந்தா. முதன்முதலாக சமந்தா நடித்துள்ள இந்த லக்ஸ் விளம்பரத்தை வரும் நவம்பர்-1 முதல் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.